simbuஅஜீத் நடித்த வெற்றி திரைப்படமான என்னை அறிந்தால்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்த படத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், ராணா, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த கூறியதாவது: ”அச்சம் என்பது மடமையடா” படத்தின் படப்பிடிப்பு 90% வரை முடிந்துவிட்டது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில் இந்த படம் உள்ளது. எனினும் இந்த மாதமும், அடுத்த மாதமும் அதிகளவில் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருவதால், தீபாவளிக்கு பின்னர் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் ரிலீசாகும். இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். இன்னும் ஒரு பாடலை அவர் விரைவில் கம்போஸ் செய்ய உள்ளார்’ என்று கூறினார்

மேலும் சிம்பு படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதாக கூறப்படுவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய கவுதம் மேனன், ‘என்னை பொருத்தவரையில் சிம்பு சில மணி நேரங்கள் படப்பிடிப்பிற்கு  தாமதமாக வந்தாலும், அன்றைய தினம் நாங்கள் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகள் அனைத்தையும் எடுத்து முடிக்க அவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பார். கடந்த மூன்று வருடங்களாக திரைப்படம் எதுவும் வெளியாகாததால் சில சமயம் சிம்பு மன அழுத்தத்தில் இருப்பது உண்மையாக இருந்தாலும் எங்கள் படத்தை பொறுத்த வரையில் அவரால் எந்த தடங்கலும் இல்லை. சில நேரங்களில் தாமதமாக வருவதாக அவர் கூறும்போது, அவருடைய நிலைமையை புரிந்து கொண்டு நாங்களும் சில விஷயங்களை அவருக்காகவே விட்டு கொடுத்துள்ளோம்’ என்று கூறினார்.

English Summary:Shooting delay for Simbu? Gautham Menon Description.