அஜீத், விஜய் ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுக்கு ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து வரும் நடிகை என்ற பெருமை பெற்றுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் இவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சிம்பு நடித்து வரும் ஒரு படத்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை சமீபத்தில் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.’

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருவதால் ‘மான் கராத்தே’ படத்தில் இடம்பெற்ற ‘உன் விழிகளில் விழுந்த நாட்களில்’ என்று பாடலுக்கு பின்னர் அவர் தமிழில் வேறு எந்த பாடலையும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷமிதாப் படத்தில் தங்கை அக்ஷரா ஹாசனுக்காக மட்டும் ஒரு பாடலை சமீபத்தில் பாடினார்.

English Summary: Actress Shruthihasan sang a song for STR and Nayanthara Starring Film “Ithu Namma Aalu” after long time.