சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில் சமீபத்தில் சூர்யா டுவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில் சூர்யாவிடம் ஒரு ரசிகர் “நீங்கள் ரீமேக் செய்ய விரும்பும் தமிழ்ப்படம் எது” என்ற கேட்ட கேள்விக்கு பதிலளித்த சூர்யா, ‘சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினார்.

கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ், அம்ஜத்கான், லிசி உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜசேகர் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் இந்த படத்தை தயாரித்ததிருந்தது.

இந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக சூர்யா கூறியுள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து ‘விக்ரம்’ திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டால் சூப்பர் ஹிட் ஆகும் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary: Actor Surya is liked to remake the Kamalhasan’s Film “Vikram”.