si selectionகடந்த மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற்ற எஸ்.ஐ. பணிக்கான எழுத்துத்தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவை www.tnusrbexams.net என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த எழுத்து தேர்வை தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம், தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்து தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது மட்டுமின்றி கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விவரமும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆகஸ்ட் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் உடல் தகுதித் தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் 15 இடங்களில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும். உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் பின்னர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது

English Summary:SI Choose the date for the announcement of the winners of the fitness test