sj-surya-241115வாலி, குஷி, உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் ரிலீஸ் செய்த ‘இசை’ படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் அடுத்த படத்தை தொடங்க உள்ளார்.

விஜய்யின் 60வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தன்னுடைய அடுத்த படத்தை தள்ளி போட்டு வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்று உறுதியாகியதால் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளா.ர்

புதுமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிப்பதுடன் இந்த படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘174’ என்ற டைட்டிலை எஸ்.ஜே.சூர்யா தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கோலிவுட்டில் 49ஏ, 144, 24 ஆகிய எண்களின் பெயர்களில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதே பாணியிலான டைட்டிலை எஸ்.ஜே.சூர்யா தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மரணம் நிகழும்போது அந்த மரணத்தை போலீஸார் கொலை என்று சந்தேகித்தால் ‘174’ சட்டத்தை பயன்படுத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கம். இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில் கலந்த ஒரு கதையை இயக்குநர் மணிகண்டன் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் மணிகண்டன் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய பல திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-SJ surya to direct the movie named 174