இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான புறநகர் மின்சார ரயில்கள் நேரம் தற்போதுள்ளதை விட 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். மேலும், சில மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும், என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல்- திருத்தணி; கடற்கரை- திருத்தணி; சென்ட்ரல் – சூலூர்பேட்டை; கடற்கரை – சூலூர்பேட்டை இடையே இரு மார்க்கங்களிலும் புறப்படும் மற்றும் சென்றடையும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தாம்பரம்- செங்கல்பட்டு, செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் திருத்தணி மார்க்கத்தில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

English Summary: Suburban Train Timings can be changed and come to live from today.