நிறைமாத கார்ப்பிணியான இந்திய அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி, டெல்லி அருகே கிர்கானில் உள்ள ஃபோரிஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க ஒரு வார காலமே உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் தோனியின் முதல் டென்சன் தீர்ந்தது. குழந்தை பிறந்தது குறித்து தோனிக்கு தகவல் அளிக்கப்பட்டதும் அவர் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். தோனி, தன்னுடைய மனைவியின் நிலை குறித்து இருந்த டென்ஷன் தற்போது விலகி ரிலாக்சாக இருப்பதாக சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Caption cool(MS.Dhoni) becomes Daddy cool.