திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் எஸ்பி அரவிந்த் ஆய்வு செய்தார்.

பரணி தீபம், மகா தீபம் ஏற்றுதல் போன்றவை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற உள்ளது.  அதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை உச்சிக்கு

மகா தீப கொப்பரை அமைக்கும் இடம், தீபம் ஏற்றும் திருப்பணியாளர்களுக்கான இடவசதி, மழை இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மலைக்கு செல்ல எந்தெந்த வழித்தடங்களை பயன்படுத்துவார்கள் என கண்டறிந்து, அந்த இடங்களில் கண்காணிப்பு தடுப்புகள் அமைத்தல் குறித்து எஸ்பி அரவிந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 29ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *