சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை குறித்து தெரிவிக்க வேண்டிய புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:

1. சிதம்பரனார்—-ஸ்ரீ சாரதி வித்யாலயா மழலையர்-தொடக்கப் பள்ளி, பிடாரியார் கோயில் தெரு, ஏழுகிணறு.

2. ராயபுரம்—சென்னை உருது மகளிர் தொடக்கப் பள்ளி, ராயபுரம் (கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம்)

3. பெரம்பூர்—சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கபிலர் தெரு, பெரம்பூர் (டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி எதிரில்)

4. அண்ணாநகர்—ஜெய்கோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை,

சூளைமேடு.

5. அம்பத்தூர்—அரசினர் உயர் நிலைப் பள்ளி, கோலடி (பெட்ரோல் பங்க் பின்புறம்)

6. வில்லிவாக்கம்—குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 5-ஆவது தெரு, எஸ்.ஆர்.பி. நகர், கொளத்தூர்.

7. திருவொற்றியூர்—ராமசாமி முதலியார் சமுதாயக் கூடம், திருவொற்றியூர், (கண்ணாடி தொழிற்சாலை-அசோக் லேலண்ட் பணியாளர் குடியிருப்புக்கு அருகில்)

8. ஆவடி—-நகராட்சி நடுநிலைப் பள்ளி, சபி நகர், 3-வது தெரு விரிவு, முத்தா புதுப்பேட்டை.

9. தியாகராய நகர்—சென்னை தொடக்கப் பள்ளி, ஈஸ்வரன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம் (மேட்லி சுரங்கப் பாதை அருகில்).

10. மயிலாப்பூர்—-சென்னை உயர்நிலைப் பள்ளி, சிருங்கேரி மடம்சாலை, ஆர்.ஏ.புரம் (மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்)

11. பரங்கிமலை—-நகராட்சி நடுநிலைப் பள்ளி, பெரிய தெரு, கீழ்க்கட்டளை (உழவர் சந்தை அருகில்).

12. தாம்பரம்—சமுதாய நலக்கூடம், வேங்கைவாசல் பிரதான சாலை.

13. சைதாப்பேட்டை—-தாடண்டர் நகர் திறந்த வெளி மைதானம், தாடண்டர் நகர், சைதாப்பேட்டை.

14. ஆயிரம்விளக்கு—-செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளி, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை.

15. சேப்பாக்கம்—-சென்னை நடுநிலைப் பள்ளி, வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி.

16. சோழிங்கநல்லூர்—-ஆதிபராசக்தி திருமண மண்டபம், அண்ணா நெடுஞ்சாலை, கந்தன்சாவடி.