சென்னை: இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, ஷீரடி மற்றும் கேரள கோவில்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

*ஷீரடி யாத்திரை ரயில் மதுரையில் இருந்து 26ம் தேதி புறப்படுகிறது. மஹாராஷ்டிராவில் ஷீரடி சிங்னாபூர் சனிபகவான் திரையம்பகேஸ்வர் ஜோதிலிங்க கோவில்களுக்கு சென்று வரலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 5,885 ரூபாய் கட்டணம்

* கேரளா சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து வரும் 20ல் புறப்படும். கேரளாவில், குருவாயூர், சோட்டானிக்கரை, ஆலப்புழா, கொச்சி, அதிரப்பள்ளிக்கு செல்லலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 5,830 ரூபாய் கட்டணம்.

மேலும் தகவல்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி மையத்தை 90031 40680, 90031 40681 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *