ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா வெண்கலம் வென்றார்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள தமிழகத்தின் தீபிகா பல்லீகல், மலேசியாவின் நிக்கோல் டேவிட்டை (9வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை 7–11 என இழந்த தீபிகா, அடுத்த இரண்டு செட்டையும் 9–11, 6–11 என பறிகொடுத்தார். முடிவில், தீபிகா 3–0 என்ற கணக்கில் (7–11, 9–11, 6–11) தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார்.

* மற்றொரு அரையிறுதியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா (16வது இடம்), தரவரிசையில் 40வது இடத்திலுள்ள மலேசியாவின் சிவசங்கரியை எதிர் கொண்டார். இதில் ஏமாற்றிய ஜோஷ்னா 1–3 என வீழ்ந்து வெண்கலம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *