கடந்த 80 மற்றும் 90களில் கோலிவுட்டையும் அதன்பின்னர் பாலிவுட்டையும் கலக்கி வந்த நடிகை ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷிகபூர் என்ற இரண்டு மகள்கள் இருந்த நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அதன்பின்னர் தற்போது விஜய் நடித்துள்ள புலி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் தனது மகள்கள் இருவரையும் திரையுலகில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மகள்களின் அறிமுகம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

மகள்களுக்கு பொருத்தமான கதையை ஸ்ரீதேவி பிரபல இயக்குனர்களிடம் கேட்டு வருவதாகவும், விரைவில் பாலிவுட்டில் மூத்த மகள் ஜான்வியும், அதன் பின்னர் இளையமகள் குஷ்கபூரும் நாயகிகளாக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary : Sridevi’s plan to introduce her daughters to Bollywood.