வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, ஜீவா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது விஷால், காஜல் அகர்வால் நடித்து வரும் ‘பாயும் புலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் ‘வில் அம்பு’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஷால் மற்றும் காஜல் அகர்வால் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ஹீரோ ஸ்ரீ நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை விரைவில் திருமணம் செய்யப் போகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ் வெங்கட்ராமனின் அனுமதியுடன் இந்த படத்தில் நடிப்பதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிக்க கணேஷ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நிஷா தெரிவித்துள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷாவின் நிச்சயதார்த்தம் சமீபத்தில்தான் நடந்தது. இவ்வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Suseenthran next film with actress nisha