சென்னை: லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை காலம் துவங்குவதை அடுத்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரும் 28ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

வேலூர் ,திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி , சேலம் ,நாமக்கல் , திருச்சி ,கரூர், திண்டுக்கல்,மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *