theri_audio_lunchஇளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இன்னும் ஓரிரு நாட்களில் தணிக்கை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பு தமிழில் ரிலீஸ் ஆகும் அதே ஏப்ரல் 14ஆம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நடித்த துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்களுக்கு விஜய்க்காக குரல் கொடுத்த வாசு என்ற டப்பிங் கலைஞர் ‘தெறி’ படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் விரைவில் வெளியாகும் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்தது. இதன்படி தற்போது இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு “போலீஸ் ஓஹ்டு” என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவிலும் இந்த படம் தமிழிலேயே ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் ‘தெறி’ என்றால் மலையாளத்தில் கெட்ட வார்த்தை இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படும் என தெரிகிறது. தெறி’ என்றால் மலையாளத்தில் கெட்டவார்த்தை என்பதால் இந்த படத்திற்கு பொருத்தமான மலையாள தலைப்பை படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ‘தெறி’ படத்தின் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. தமிழகத்தில் கோவை, சேலம் உள்பட ஒருசில ஏரியாக்களின் உரிமைகளும் விற்பனையாகிவிட்ட நிலையில் தற்போது கேரள மாநில ரிலீஸ் உரிமையும் விற்பனையாகியுள்ளது. இந்த படத்தின் கேரள மாநில உரிமையை ‘Friday Film House’ என்ற நிறுவனம் பெற்றுள்ளது. பிரபல மலையாள நடிகர் விஜய்பாபு மற்றும் மலையாள நடிகை சாண்ட்ரா தாமஸ் ஆகியோர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

English Summary: “Theri” Movie Telugu title Announced.