திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா ரத தேரோட்டத்திற்கு, ராட்சத இரும்பு சங்கிலியிலான வடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ.,14ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, 23ல், 2,666 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மொத்தம், 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான, நவ.,20ல், மகா ரத தேரோட்டம் நடக்கிறது. 100 டன் எடை உள்ள, சுவாமியின் மகா ரதத்தை இழுத்துச் செல்ல, இடது மற்றும் வலது புற சங்கிலி தலா, 250 அடி நீளம், 5 டன் அளவில் இரும்பு ராட்சத சங்கிலி வடம் பயன்படுத்தப்படும்.

பெண்கள் மட்டுமே இழுத்து செல்லும், பராசக்தி அம்மன் தேருக்கு, வலது மற்றும் இடது புற சங்கிலி தலா, 200 அடி நீளம், 4 டன் அளவிலான இரும்பு ராட்சத சங்கிலி வடம் பயன்படுத்தப்படும். இந்த வடம் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *