Thoongavanam-29102015
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் ‘தூங்காவனம்’ படத்தின் தணிக்கை தகவல்கள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. நேற்று மாலை இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதிகாரிகள் இந்த படத்திற்கு U/A சர்டிபிகேட் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்ற எந்தவித காட்சிகளையும் கட் செய்யாமல் அனைத்து காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தணிக்கைக்கு பின்னர் இந்த படம் இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் ஓடுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘தூங்காவனம்’ படம் சென்சார் ஆகிவிட்டதை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி அல்லது தீபாவளி தினமான நவம்பர் 10ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் இந்த படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
English summary-Kamal’s Thoongavanam gets U/A certificate