தமிழகத்தில், 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, பணியிடங்களுக்கு இன்று (14.12.2022) முதல், வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர் 1.07.2022 அன்று 32 வயதுக்குள் கீழ் வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) , ஆதி திராவிடர், ஆதி திராவிட அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ஆசிரியர் வகை (Teacher Category) விண்ணப்பதாரர்கள் 1.07.2022 அன்று 42 வயதுக்குள் கீழ் வேண்டும்.

வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *