தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் பெரும் விவாதமாக மாறியது.

இதையடுத்து, படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. டீசர் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *