சென்னை-கூடூர் பிரிவில், எழாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27, 29, 31 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்தாகும் ரயில்: கும்மிடிப்பூண்டியிலிருந்து சூலூர்பேட்டைக்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்தாகிறது.

பகுதி ரத்தாகும் ரயில்கள்: மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 2.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதி ரத்தாகிறது.

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-கும்மிடிப்பூண்டிக்கு மாலை 6.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டுக்கு காலை 6 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டைக்கு அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கவரப்பேட்டையில் சில நிமிடம் நின்று, சூலூர்பேட்டையை 10 நிமிஷம் தாமதமாக சென்றடையும்.

ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:

முழுமையாக ரத்து: கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டைக்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டைக்கு காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை- மூர்மார்கெட்டுக்கு நண்பகல்1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *