கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 1,868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு மொத்தம் 1,90,922 பேர் எழுதினர். www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பதற்கு தேர்வர்கள் 1:1 என்ற கணக்கில் அழைக்கப்பட்டுள்ளனர்.