மருந்து சாப்பிட்டால் 7 நாட்கள் , மருந்து இல்லையேல் ஒரு வாரம் தொல்லை கொடுக்கும் சளி என்பர். இத்தகைய தொல்லை பிடித்த சளியை உடைக்க ருசியான மருந்து உண்டு என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாங்க பூண்டு மஞ்சள் பால்!

பூண்டு மஞ்சள் பாலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமலை விரட்டும் அருமருந்து; மேலும் தொண்டை கரகரப்பு பிரச்ச‌னைக்கு உடனடி நிவாரணம் தரும்.

அதுமட்டுமல்ல, மஞ்சள் பூண்டு கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூண்டு மஞ்சள் பாலை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவு தூங்கும் முன்பு குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

பூண்டு மஞ்சள் பால் தயாரிக்க தேவையான பொருள்கள்:

1. ஒரு டம்ளர் பால்,
2 . 5 பல் பூண்டு,
3. 1/4 டீஸ்பூன் மஞ்சள்,
4. 1/4 டீஸ்பூன் மிளகுப்பொடி,
5. பனைக்கற்கண்டு தேவையான அளவு.

செய்முறை: முதலில் பால், மஞ்சள், மிளகு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின்னர் 5 பல் பூண்டினை இடித்து பாலில் சேர்த்து நன்கு வேகவைத்து இறுதியில் பனைக்கற்கண்டு சேர்க்கவும் .

பின்குறிப்பு : இந்த பாலில் உஷ்ணம் அதிகம் என்பதால் ஒரு நாளில் ஒருமுறை மட்டும் குடிப்பது நல்லது. மேலும்வேகவைத்த பூண்டினை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் மூன்றே நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். இந்த பாலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நாட்பட்ட சளி தொந்தரவும் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *