vijay-231115‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வரும் இளையதளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிவடைந்து தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் அட்லி, தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அட்லியின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்களை உற்சாகமாகி இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் டுவிட்டரில் #Vijay59FLFromNov26 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது வந்த புதிய தகவலின்படி மீனா மகளுக்கு இந்த படத்தில் ஒரு பாடல் இருப்பதாகவும், அவருக்கான பாடலை தேசிய விருது பெற்ற உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
English summary-Vijay’s 59th movie first look poster release date announced