Vijay60-movie-launch-still3அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை அருகே தொடங்கியது.

‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. முதன்முதலாக விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். கவியரசு வைரமுத்து இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

நேற்று தொடங்கிய ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு 2 நாட்கள் மட்டும் நடைபெறும் என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிந்தபின்னர் மே இறுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

English Summary: Vijay’s 60th film. Started shooting.