puliஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான்கே நாட்களில் இந்த படத்தின் டிரைலர் யூடியூப் இணையதளத்தில் நான்கு லட்சம் பார்வையாளர்களையும் மிக அதிகமான லைக்குகளையும் பெற்று பல சாதனைகள் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் இருக்கும் என விஜய் ரசிகர்கள் உள்பட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது விஜய் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் செய்தியாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘புலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான SKT பிலிம்ஸ் நிறுவனத்தினர் இந்த படத்தை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் டுவிட்டர் இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதாலும், அதனை அடுத்து சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை தினங்களாக அமைந்திருப்பதால் இந்த படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் இருக்கும் என்றும், அந்த நாட்களில் ஃபேமிலி ஆடியன்ஸ்களின் வரவு தியேட்டர்களில் அதிகளவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், நந்திதா, ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன், தம்பி ராமையா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷபு தமீன் ஆகிய இருவரும் இந்த படத்தை பிரமாண்டமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Vijay’s puli, the official release date of the film.