கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை ஆகிய ஐந்து படங்களில் குறுகிய காலத்தில் நடித்து முடித்த சிவாஜி குடும்பத்து வாரீசான விக்ரம் பிரபு நடித்த ஆறாவது படம் ‘இது என்ன மாயம். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி, நாசர், அம்பிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. விஜய் நடித்த தலைவா’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவரும், நடிகை அமலாபால் அவர்களின் கணவருமான இயக்குனர் ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் பிரபு தற்போது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த எஸ்.நந்தகோபால் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி, பூர்ணா நடித்த ‘தகராறு’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீர சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 21 முதல் பாண்டிச்சேரியில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.

விக்ரம் பிரபு ஏற்கனவே ‘வாஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திய, பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கி வரும் இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.

English Summary: Vikram Prabhu next film title is going to be “Veera Shivaji”.