சமீபத்தில் ‘ஐ’ என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த விக்ரம், தற்போது கோலிசோடா’ பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தினை முடிக்கும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ராஜதந்திரம் பட இயக்குனர் அமித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விக்ரம் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட திரைப்படம் ‘கரிகாலன்’. இந்த படத்தின் தயாரிப்பாளரே விக்ரம்-அமீத் இணையும் படத்திற்கு தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர் அமீத்தின் சகோதரர் என்பதும் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தவிர அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விக்ரம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளது.

English Summary : Vikram signed for a film where director and music director are brothers,