தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த தேதியை மாற்ற வேண்டும் என நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிட உள்ளதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தொலைபேசியில் விஷாலை தொடர்பு கொண்டு, ‘நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்க்க முடிவு செய்தால் அவரோடு தேர்தலில் நேருக்கு நேர் மோதுவதை விட்டுவிட்டு, நீதிமன்றம் சென்றது, நடிகர் சங்கத்திற்கு செய்யக்கூடிய நல்ல விஷயமா? என்ற கேள்வியை விஷால் முன் வைத்தார். இதற்கு தொலைபேசியிலெயே பதில் கூறிய விஷால், ‘நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி அண்ணன் அவர்களை எதிர்த்து வேறு வழியில்லாமல் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஷாலுக்கு இளையதலைமுறை நடிகர்கள் அனைவருடைய ஆதரவும் இருப்பதால் அவர் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

English Summary : Vishal standing against Radharavi in Kollywood Actors association election to be held on 15th July.