இந்தியாவின் முதல் பிரமாண்ட திரைப்படம் என்ற பெயர் பெற்ற ‘ஷோலே’ படத்தில் தர்மேந்திராவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஹேமாமாலினியின் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஷோலே படத்தில் நடித்தபோதே தர்மேந்திராவுடன் காதல் வயப்பட்டு அதன் பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட ஹேமாமாலினிக்கு இஷா தியோல் மற்றும் அஹானா தியோல் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் இளைய மகள் அஹானா தியோல் கடந்த ஆண்டு டெல்லி தொழில் அதிபர் வைபவ் வோராவ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமான அஹானாவுக்கு நேற்று மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் நடிகை ஹேமாமாலினி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹேமாமாலினி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “‘‘உங்களது அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. அகோனா தியோலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் மிகவும் சிலிர்ப்புடன் இருக்கிறோம். தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் வெளியான ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் நடித்த குஜாரிஷ் (Guzaarish) என்ற படத்தில் அஹானா தியோல் உதவி இயக்குனராக சஞ்சய் லீனா பஞ்சாலியிடம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Hema Malini is overjoyed to become a grandmother. Her daughter Ahaana Deol Vohra has delivered a baby boy on Thursday.