தொழில் நகரமான கோவையில் தனியார் நிறுவனம் ஒன்று, குறைவான விலையில் வாஷிங் மெஷினை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த வாஷிங் மெஷின் விலை குறைவு என்றாலும், தரத்திலும், வசதிகளிலும் மற்ற நிறுவனத்தின் வாஷிங் மெஷினுடன் எந்த வகையிலும் தங்கள் வாஷிங் மெஷின் குறைந்தது இல்லை, இதன் விலை 2,500 ரூபாய், ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இதன் விலை 2950 ரூபாய் என தெரிகிறது .

மேலும் இந்த வாஷிங் மெஷின் 7 நிமிடத்தில் துணி துவைத்து முடித்துவிடும் என்றும்வாஷிங் மெஷினுக்கு கோவை பகுதியின் நடுத்தர ‌இல்லத்தரசிகளிடம் மிகுந்த‌ வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் வாஷிங் மெஷின்களுக்கு ஓர் ஆண்டு வாரண்டியும் அளிக்கப்படுகிறது. பணம் செலுத்திவிட்டு, விலாசத்தை தெரிவித்தால் குறைந்த விலை வாஷிங் மெஷின் வீடு தேடி வரும் ‌என்கின்றனர் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *