சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படம் சமீபத்தில் C2H மூலம் வெளியாகியது. இந்த படத்தின் டிவிடி முதல் நாளில் 10 லட்சமும், தற்போது வரை 15 லட்சமும் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதால் இயக்குனர் சேரன் உற்சாகத்தில் இருக்கின்றார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த சேரன், ‘பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப் வரிசையில் இந்த படமும் தரமுள்ளதாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படங்களை மட்டுமே ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எல்லா படங்களையும் வெளியிடும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் உருவான ஜெய் நடித்துள்ள ‘அர்ஜூனன் காதலி’ என்ற படத்தை C2H மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், இனிமேல் C2H மூலம் வாரம் ஒரு படம் வெளியிட இருப்பதாகவும் சேரன் கூறியுள்ளார்.

English Summary : SivaShakthi Paandiyan’s new film “Arjunin Kaadhali” is to be released in first week of April. Director Seran also announced that weekly one film will be released through C2H.