மத்திய அரசின் கப்பல் துறை அமைச்சகம் கொடுத்த இலக்கை முன்கூட்டியே கடந்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஒவ்வொரு துறைமுகத்திற்கும் சரக்குகளை கையாள ஒரு இலக்கை நிர்ணயம் செய்வது வழக்கம். அதன்படி கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் எண்ணூர் துறைமுகத்திற்கு 28.50 மில்லியன் டன் சரக்குகளை கையாள நிர்ணயம் செய்தது. இந்த இலக்கை காமராஜர் துறைமுகம் 18 நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் அடைந்து சாதனை புரிந்துள்ளது. இந்த இலக்கில் 14.30 மில்லியன் டன்கள் நிலக்கரியை தமிழ்நாடு மின்சாரம் வாரியம் மட்டுமே கையாண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எண்ணூர் துறைமுகம் கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 12% அதிக வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் 30 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள முடியும் என நம்புவதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary : Each Port has a particular goal to achieve every year. This year Chennai Kaamaraj port has reached their destiny with 12 days to spare.