சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. ‘வேதாளம்’ படத்தின் டீசர் ‘புலி’ ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது அக்டோபர் 8ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தின் டீசரில் உள்ள காட்சிகள் குறித்த சில தகவல்கள் டுவிட்டரில் கசிந்துள்ளது.

‘வேதாளம்’ படத்தின் டீசர் 47 வினாடிகள் ஓடுவதாகவும், இந்த டீசரின் முதல் காட்சியில் அஜீத் டுகாட்டி பைக்கை ஸ்டைலாக ஓட்டி வருவது போன்ற காட்சி ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற வசனமான ‘I am back” என்ற வசனமும் இந்த டீசரில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த டீசரில் அனிருத்தின் பின்னணி அட்டகாசமான அமைந்துள்ளதாகவும், அஜீத்தின் படத்திற்காக அனிருத் கூடுதல் கவனத்துடன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டீசர் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் இணையத்தில் கசிந்ததாக ஒரு வதந்தி திடீரென டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், ”தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் தீம் மியூசிக், அனிருத் கம்போஸ் செய்தது இல்லை என்றும், அஜீத் ரசிகர் ஒருவர் ஆர்வக் கோளாறில் தானே ஒரு தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து இணையத்தில் பரப்பியுள்ளதாகவும், இந்த தீம் மியூசில் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது.

English Summary : New information about Ajith’s Vedhalam teaser.