ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என இந்திய வீராங்கனை வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முதல் ரவுண்டில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. ஒட்டுமொத்தமாக 6-2 என வெற்றி பெற்றார். இந்த தங்கத்துடன் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை இவராவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *