Yugi Sethu in Kamalhasan’s “Thoongavanam” Filmகமல்ஹாசனுடன் அன்பே சிவம், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய படங்களிலும், அஜீத்துடன் வில்லன், அசல் போன்ற படங்களிலும், விஜயகாந்துடன் ரமணா படத்திலும் நடித்த பிரபல நடிகர் யூகிசேது, தற்போது கமல் நடிக்கவுள்ள புதிய திரைப்படமான ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

யூகிசேது நடிகர் மட்டுமின்றி ‘கவிதை பாட நேரமில்லை’ என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுடன் மூன்று படங்கள் ஏற்கனவே நடித்திருந்ததாலும், கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த யூகிசேதுவை சரியான நேரத்தில் கமல் பயன்படுத்தியுள்ளதாக ‘தூங்காவனம்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத்குமார், மதுஷாலினி, யூகிசேது மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிவிட்ட ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

English Summary: Yugi Sethu in Kamalhasan’s “Thoongavanam” Film.