bsnl-29100215பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னை தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்களை கவர்வதற்காகவும் புதிய செல்போன் வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும் ரூ.118 கட்டணத்தில் புதிய ப்ரீபெய்டு இணைப்பு வழங்கப்படுகிறது. ஒருமாதம் பயன்படுத்தக்கூடிய இந்த திட்டத்தில் ஒரு ஜி.பி வரை உபயோகிக்கலாம். மேலும் ஒரு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் பேசலாம். இதில் 10 ரூபாய் மதிப்பளவிற்கு பேசவும் முடியும். மாணவர்களுக்காக வழங்கப்படும் இந்த திட்டத்தை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.எஸ்.என்.எல் இதனை வழங்கி வருகிறது.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இத்திட்டத்தில் சேர வசதியாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பி.எஸ்.என்.எல் ‘ஸ்டால்’ அமைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்ற 400 மாணவர்களுக்கு சென்னை டெலிபோன் தலைமை பொது மேலாளர் எஸ்.எம். கலாவதி புதிய சிம் கார்டை வழங்கினார். உரிய ஆவணங்கள் வைத்திருந்ததால் உடனே ‘ப்ரிபெய்டு’ செல்போனை செயலாக்கம் செய்தனர்.

இதுகுறித்து எஸ்.எம் கலாவதி கூறியதாவது:- பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன சென்னை-தமிழ்நாடு வட்டத்தில் 280 இடங்களை நிரப்ப பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொறியியல் பாடப்பிரிவுகளை படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். 3 மாதத்தில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ‘டிராய்’ அறிக்கை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.32 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

3 நாட்கள் நடந்த கலந்தாய்வில் சுமார் 5000 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால் அவர்களுக்கு உடனே இணைப்பு வழங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: BSNL will offer special offer counseling for college students