19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு.

சென்னை பெருநகர காவல் மாவட்டத்தில் வரும் 19ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி , பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல். செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு.

முழு ஊரடங்கில் மருத்துவ பணிகள் மற்றும் சேவைகளுக்கு விதிவிலக்கு. அவசர தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லையில் மத்திய, மாநில அரசுத்துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களில் வரக்கூடாது – நடந்து சென்றே பொருட்களை வாங்க வேண்டும்.

உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி – டீக்கடைகளுக்கு அனுமதி கிடையாது. உரிய அனுமதி பெற்று உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. சென்னையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்

முழு ஊரடங்கின் போது சரக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்திற்கு எந்த தடையும் கிடையாது. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்தால் மட்டுமே இ பாஸ். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில், விமானங்களுக்கு தற்போதைய நடைமுறை தொடரும்.

அரசின் அனுமதியுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்படலாம்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். சென்னை பெருநகர காவல் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் இயங்காது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்.

முழு ஊரடங்கின் 12 நாட்களில் பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றும் கட்டுமானப்பணிகளுக்கு தடை இல்லை. முழு ஊரடங்கு அமலில் உள்ள 12 நாட்களில் தொழிலாளர்கள் தினமும் வீடு – தொழிற்சாலை சென்று வந்து பணிபுரியும் முறைக்கு அனுமதி இல்லை. தொழிற்சாலை அல்லது தொழிற்சாலை அருகே தங்கி பணியாளர்கள் பணியாற்ற மட்டுமே அனுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *