ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியாவின் 15 வயது வீரர் ஷர்துல் விஹான் வெள்ளி வென்றார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 18 வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் டபுள் டிராப் துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் 15 வயது வீரர் ஷர்துல் விஹான், அன்குர் மிட்டல், 26, பங்கேற்றனர்.
இதில் விஹான் (141) முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேற மிட்டல் (134) 9வது இடம் பிடித்து ஏமாற்றினார். பின் நடந்த பைனலில் 60 சுற்று முடிவில் விஹான் (55), தென் கொரியாவின் ஷின் யின்வுவை (56) விட பின் தங்கினார். தொடர்ந்து இருவரும் மாறி மாறி முதலிடம் பெற்றனர். கடைசியில் 1 புள்ளி பின் தங்கிய விஹான் (73), வெள்ளிபதக்கம் கைப்பற்றினார். ஷின் (74) தங்கம் தட்டிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *