பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன.

பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *