2019 மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை (மார்ச்10,2019) அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது

ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது

மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது

மே 12-ம் தேதி ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது

மே 19-ம் தேதி ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம், ஓசூர் உட்பட காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் விவரம்:

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27-ம் தேதி

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29-ம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *