suriya-249516இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ’24’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு என்ற இந்த மூன்று நாட்களில் இந்த படம் பிரமிக்கத்தக்க வசூலை பெற்றுள்ளது.

மே 6 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் இந்த படம் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.1.65 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கல்பட்டு ஏரியாவில் ரூ.4.5 கோடியும், கோவையில் ரூ.3 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதேபோல் தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, மற்றும் ஆந்திராவில் ’24’ திரைப்படம் ரூ.16.5 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் இந்த படம் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ’24’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் இந்த படம் மூன்றே நாட்களில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சினி கேலக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English Summary: 3-day collections Status for surya’s 24.