politicalparty9516தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபுறம் தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஊடகங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளை எடுத்து வருகின்றன.

ஏற்கனவே தினமலர் மற்றும் நியூஸ் 7 ஊடகங்கள் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்புகளின்படி திமுக 141 தொகுதிகளிலும், அதிமுக 87 தொகுதிகளிலும், பாமக 2 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெல்லும் என கணித்துள்ளது.

இதனையடுத்து தற்போது கருத்துக்கணிப்புகளின் மேதை என்று அழைக்கப்படும் என்.டி.டி.வி பிரணாய் ராய் அவர்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளது. இதன்படி திமுக 143 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும் அதிமுகவுக்கு 70 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு கருத்துக்கணிப்புகளும் திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்புகளின்படி அஇஅதிமுக வுக்கு 130 தொகுதிகளும், திமுக வுக்கு 70 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 34 தொகுதிகளும் என்றும் கணித்துள்ளது.

கருத்துக்கணிப்புகள் பல சமயங்கள் தவறானதாகவும், சில சமயம் சரியானதாகவும் இருந்துள்ளதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த கருத்துக்கணிப்புகள் சரியா? தவறா? என்பது வரும் 19ஆம் தேதி தெரிந்துவிடும்.

English Summary: Which political party/coalition will win the 2016 assembly elections in Tamil Nadu.