புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.

அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *