பள்ளி மாணவர்கள், தேர்வுகளை தைரியத்தோடு எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘எக்ஸாம் வாரியர்ஸ்‘ நூலின் தமிழ்ப் பதிப்பான ‘பரீட்சைக்குப் பயமேன்’ எனும் நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட முதல் பிரதியை முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
பிரதமர் மோடி ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலின் தமிழ்ப் பதிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
பள்ளியில் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (Exam Warriors) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு புத்த கத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில், தேர்வுகளை மாணவர்கள் உற்சாகத்தோடும் மனமகிழ்ச்சியோடும் சந்திக்குமாறு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. படிப்புடன் விளையாட்டு, தூக்கம், சுற்றுலா பயணம் போன்றவற் றின் முக்கியத்துவங்களும் விவரிக்கப்பட் டுள்ளன. மேலும், தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மோடி எழுதியுள்ள கடிதமும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆங்கி லத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை ஓய்வுபெற்ற பேராசிரியையும் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்புவின் சகோதரியு மான வெ.இன்சுவை ‘பரீட்சைக்குப் பயமேன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அலையன்ஸ் பதிப்பகம் பதிப்பித்துள்ள இந்த புத்தகத் தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டி யில் உள்ள ஆளுநர் மாளிகை புல்வெளி அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட, முதல் பிரதியை முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
ஆளுநர் தலைமையுரை ஆற்றுகை யில், ‘‘தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் புத்தகம் தமிழக மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி தேர்வுக்கு மட்டுமல்ல வாழ்க்கை தேர்வுக்கும் உபயோகமான பல விஷயங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ‘தேர்வு ஒரு விழா. அந்த விழாவை கொண்டாட வேண்டும்’ என்ற வரிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன’’ என்றார். முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘மாணவர்கள் தேர்வுக்குப் படிக்காமல் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்ணுடன் நின்று விடாமல் அறிவையும், அனுபவத்தையும் தர வேண்டும். இந்த தலைசிறந்த சிந்தனையை பிரதமர் மோடியின் புத்தகம் வலியுறுத்துகிறது. இந்தப் புத்தகத்துக்காக அவருக்காக பாராட்டுக்கள் உலக அளவில் குவிகின்றன. அவருக்குப் பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டார்
விழாவில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நிறை வாக, அலையன்ஸ் பதிப்பக உரிமையாளர் சீனிவாஸ் நன்றி கூறினார். விழாவில், சட்டப்பேரவை தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.