நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், மேற்கண்ட மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். விரைவில் மத்திய அரசு இந்த இணைப்புக்கான ஒப்புதலை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.