சென்னை: பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும். துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 25,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், 30,000 மேற்பட்ட நியாய விலைக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள், இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் நேற்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் No Work No Pay என்ற அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்களது மண்டலத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் விடுமுறை இன்றி செயல்பட உரிய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *