தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புசற்று அதிகமாகவே உள்ளது. கடந்த ஒரு வாரமாகத் தாக்கம் குறைந்து வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன. குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திறந்தவெளி இடங்களில் கிடக்கும் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதால், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் ஆகின்றன. எனவே,பொதுமக்கள் தங்கள் வீடு சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.