சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (12.02.2023) நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை (பிப்ரவரி 12) மாலை திறக்கப்படுகிறது.
கோவில் நடையை, மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
தினமும் அதிகாலை 5 மணி முதல், மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். பிப்ரவரி 17 வரை தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.