கோடை விடுமுறையில் பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா செல்வதால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது அரிதான விஷயமாக இருக்கின்றது. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு தென்னக ரயில்வே அடிக்கடி சிறப்பு ரயில் மற்றும் பிரிமியர் ரயிலை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
1. ரயில் எண் 06034:மே 20 மற்றும் 27ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 2.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
2. ரயில் எண் 06035: மே 21, 28 தேதிகளில் திருநெல்வேலில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
3. ரயில் எண் 06036: மே 21-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
4. ரயில் எண் 06037: மே 22-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஒரு பிரியம் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த பிரிமியர் ரயில் எண் 00608 மே 24-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை, எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
English Summary: Southern Railway announced Special Trains from Chennai Egmore to Tirunelveli and Nagarkoil.