தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நேற்று முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள்து. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசு என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
1. நிதியுதவி தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளையும் மாநில அரசு வெளியிட கூடாது.
5. அரசு சார்பில் வாக்குறுதிகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்க கூடாது.
6. புதிய திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கீடு கூடாது.
4. அமைச்சர்களோ அல்லது அரசியல்வாதிகளோ புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட கூடாது.
5. அரசுத் துறையைச் சேர்ந்தவர்களோ அல்லது அரசியல்வாதிகளோ மக்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.
மேற்கண்ட விதிகளை அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறுவோர் மீது தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : Don’ts Guidelines During Election has been announced.